மேஷம்: அதிர்ஷ்டமான நாள். உழைப்போரின் எண்ணம் நிறைவேறும். அலுவலக முன்னேற்றம் பற்றி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பகைவர் ஒருவர் மனம் மாறி முன்வந்து நட்பாவார்.
ரிஷபம்: மேலதிகாரியிடம் பணிவாகப் பேசி நன்மை அடைவீர்கள். முன்னேற்றத்திற்கு எடுத்த முயற்சி ஓரளவு வெற்றி பெறும். அரசாங்க உதவி தாமதத்துக்குப் பிறகே கிடைக்கும்.
மிதுனம் : நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்த வேண்டாம். பழைய கவலைகள் தீர்வது குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். யாரிடமும் பிடிவாதமின்றி வளைந்து கொடுத்து போங்கள்.
கடகம்: எப்போதோ அறிமுகமானவர்கள் இப்போது உதவி கேட்பர். நம்பிக்கை இழக்காமல் முயற்சியை தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். முன்பு வாட்டிய சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம்: பொறுமையிழக்க வேண்டிய தருணங்களில் அமைதி காப்பீர்கள். மன நிம்மதி மீளும். விட்டுப்போன தொடர்புகளைப் புதுப்பிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கு மாறி திடீர் மகிழ்ச்சி அளிக்கும்.
கன்னி: எதையும் அதிக முயற்சிக்குப் பிறகே முடிக்க இயலும். உழைப்புக்கேற்ற வருமானம் இல்லையே என வருந்தாதீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். செய்தி ஒன்று மகிழ்ச்சி தரும்.
துலாம்: புது முயற்சி சற்றுத் தள்ளிப்போனால் அது நன்மைக்கே. தாயாருக்கு நன்மை ஏற்படும். பிடிவாத குணம் வேண்டாம். பிள்ளைகளின் வாழ்வு மேம்படுவதைக் கண்டு மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: மனதில் நிம்மதி உண்டாகி செயல்களில் தெளிவு வரும். வெளிநாட்டில் உள்ளவர்கள் பெற்றோரைச் சந்திந்து மகிழ்வர். குடும்பத்தினரின் செயலால் உங்களின் கவுரவம் உயரும்.
தனுசு: பிள்ளைகளின் குறிக்கோள் நிறைவேறி மகிழ உதவுவீர்கள். வீண் பழிகளைத் துடைத்தெறிவீர்கள். எண்ணம் ஈடேறும். கடன் எளிதாக கிடைக்க நண்பர் உதவி செய்வார்.
மகரம்: கெட்டபெயர் தவறிப்போயும் வராதபடி கவனமாக இருங்கள். பேசும் வார்த்தைகளால் சிரமத்துக்கு உள்ளாக வேண்டாம். உடல் உழைப்பை நம்புபவர்களுக்கு நன்மை பெருகும்.
கும்பம்: முன்பு சுலபமாக நிறைவேறிய செயலுக்கும் முயற்சி தேவை. தாயாருடன் சச்சரவுகள் வேண்டாம். வாகனம் வாங்குவீர்கள். பல வகை செலவுகளால் நன்மைகள் ஏற்படும்.
மீனம்: நன்மையும், லாபமும் வரும். நல்லவர் ஆலோசனை கிடைக்கும். யாரைப் பற்றியாவது வம்பு பேசினால் பிரச்னை வரும். யாரிடமும் பகை வேண்டாம். சிறு இடர்களை சந்திப்பீர்கள்.
நன்றி – தினமலர்