வியாழக்கிழமை 30 ஜூலை 2021 புரட்டாதி 20
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் புனர்பூசம்
திதி தேய்பிறை நவமி காலை 7.28 வரை. தசமி
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 09:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் விருச்சிகம் மாலை 5.33 மணி வரை பிறகு தனுசு
மேஷம்
யோகமான நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளும் நாள். தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.
மிதுனம்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். நீண்டநாள் ஆசை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும்.
சிம்மம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.
கன்னி
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக விலகிச் சென்ற கூட்டாளிகள் மீண்டும் வந்து சேரலாம். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
உணர்ச்சி வசப்படுவதைத்தவிர்த்து உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பாதியில் நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
தனுசு
மாலை நேரம் மனக்கலக்கம் ஏற்படும் நாள். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும். விலைஉயர்ந்த பொருட்களை விற்க நேரிடலாம். பயணத்தால் தொல்லையுண்டு.
மகரம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
கும்பம்
வரவும் செலவும் சமமாகும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணமொன்றால் விரயம் ஏற்படும்.
மீனம்
தொட்டது துலங்கும் நாள். விரயம் அதிகரிக்கும். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்களைச்சேர்க்க முன்வருவீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.