மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல்உண்டு. எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பயணத்தை தள்ளி வைக்க நேரிடும்.
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நல்லவர்களின் தொடர்பு உண்டு. சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.
யோகமான நாள். புதிய வேலை கிடைத்த நல்ல தகவல் வரலாம். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாளைய பகையொன்று நட்பாகலாம்.
பொதுவாழ்வில் புகழ் கூடும்நாள். புதிய பாதை புலப்படும்.வியாபார விரோதம் விலகும். வீடுவாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களை கடைசிநேரத்தில் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தொட்டது துலங்கும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலை விரிவுசெய்ய முன்வருவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும்,பதவிகளும் வந்து சேரலாம்.
பயணங்களால் பலன் கிட்டும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்காகச் செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
நல்ல சம்பவங்கள் நடைபெறும்நாள். குழந்தைகள் நலனில் அதிகஅக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
அரைகுறையாக நின்ற பணி முடிவடையும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பிவந்து சேருவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை கூடும் நாள்.அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.
நன்றி – மாலைமலர்