மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோக முயற்சி கைநழுவிப்போகலாம். வேலைப்பளு கூடும்.
ரிஷபம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.தொழில் ரீதியாக வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரலாம். கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள்.விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.
சிம்மம்
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவுகிட்டும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.
கன்னி
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
துலாம்
பேச்சில் இனிமையும், செயலில் திறமையும் வெளிப்படும் நாள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலையொன்றை எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.
விருச்சகம்
தொட்டகாரியம் வெற்றி பெறும்நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வருமானம் திருப்தி தரும். அலைபேசி வழியில் அனுகூலம் தரும் தகவல் வந்து சேரும்.
தனுசு
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். பழகிய சிலருக்காக கணிசமாக பணத்தைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
மகரம்
பொறுமைக்குயைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். பதவியில் உள்ளவர்களை பகைத்துக்கொள்ள நேரிடும்.
கும்பம்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். புதியவர்களின் நட்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.
மீனம்
மதிப்பும், மரியாதையும் உயரும்நாள். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பீர்கள். ஆற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
நன்றி – மாலை மலர்