மேஷம்
தொழில் முன்னேற்றம் ஏற்படும்நாள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும்.வாழ்க்கைத் துணைக்கு ஏற்பாடு செய்த வேலை கிடைக்கும்.
ரிஷபம்
நண்பர்களை பகைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டிய நாள். நாணயப் பாதிப்பு ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாள்வது நல்லது. ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு.
மிதுனம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அயல்நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலமான தகவல் கிடைக்கும். தொழில்பங்குதாரர்களால் நன்மை ஏற்படும்.
கடகம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்தப்பீர்கள். கைமாற்றாக கொடுத்ததொகை வந்து சேரும்.
சிம்மம்
திறமை பளிச்சிடும் நாள்.தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மாற்றங்களை செய்யலாமா என்று யோசிப்பீர்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.
கன்னி
விரோதங்கள் விலகும் நாள். வீடுமாற்றம் மற்றும் உத்தியோகமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். துணையாக இருக்கும் நண்பர்கள் தொழில்வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். கால்நடைவளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெற வழிபிறக்கும் நாள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். வழக்கமான பணிகளை இன்று மாற்றி அமைப்பீர்கள்.
விருச்சகம்
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பெற்றோர்களின் ஆதரவோடு நல்ல காரியம் ஒன்றை நடத்த முன்வருவீர்கள்.
தனுசு
கருத்து மோதல்கள் அகலும் நாள். கட்டிடப்பணி தொடரும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மகரம்
பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினைகள் அகலும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். தந்தைவழி உறவினர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். தேக ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
தடைகள் அகலும் நாள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வரலாம். விவாகப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
மீனம்
தொட்டது துலங்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு.