மேஷம்:
அசுவினி: வேற்றுமொழி பேசும் நபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும். பரணி: வீடு சம்பந்தமான கடன் தொல்லைகள், மனக்கவலை தீரும். கார்த்திகை 1: சில உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவர்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: காலையும், மாலையும் நேரெதிர் பலன்கள் இருக்கும். ரோகிணி: நேற்றைக்கு சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு தற்காலிகமானதே. மிருகசீரிடம் 1,2: பணிகளை மன நிறைவுடன் செய்து முடிப்பீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பணியில் பெரும்பகுதியை முடித்து நிம்மதி அடைவீர்கள் திருவாதிரை: சிக்கல்களை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
கடகம்:
புனர்பூசம் 4: எப்போதும்போல் நண்பர்கள் பல விஷயத்தில் துணை நிற்பர். பூசம்: பணியில் மனக்குறைகள் தீர்ந்து சலுகைகள் கிடைக்கும். ஆயில்யம்: அலுவலகத்தில் யாருடனும் அதிக நெருக்கம் வேண்டாம்.
சிம்மம்:
மகம்: பேச்சிலும், செயலிலும் மிகுந்த கவனமாய் இருந்து தப்புவீர்கள். பூரம்: வீடு, வாகனம் பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். உத்திரம் 1: நண்பர்களிடமும்கூட கவனமாகப் பேசுவதால் சிரமமற்ற நாள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: தீட்டிய திட்டங்கள் சரியான முறையில் கூடி வரும். அஸ்தம்: தேவையில்லாத விஷயங்களை நினைத்து பயப்பட வேண்டாம். சித்திரை 1,2: உறவினர்களிடம் இருந்து முக்கியமான செய்தி ஒன்று வரும்.
துலாம்:
சித்திரை 3,4: திருமணம் கைகூடும். குடும்பத்தினர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுவாதி: வாகன வசதி வாய்ப்புகள் பெருகும். மனபாரம் குறையும். விசாகம் 1,2,3: தாயாரின் மருத்துவப் பரிசோதனையில் நற்செய்தி வரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பாலின சிநேகிதத்துடன் முன்பைவிட நெருக்கம் கூடும். அனுஷம்: எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உற்சாகம் பெருகும். கேட்டை: நல்லதொரு காரணத்துக்காக பணம் நிறைய செலவாகும்.
தனுசு:
மூலம்: எதிர்பார்த்த பதவி உயர்வு சிறு தாமதத்துக்கு பிறகே கிடைக்கும். பூராடம்: வசதியான வீடு கிடைக்கும். பலநாள் சந்திக்காத உறவினர் வருவர். உத்திராடம் 1: மகள், மருமகனின் அன்பு, ஆதரவை பெறுவீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: சுபச்செலவுகள் மகிழ்ச்சி தரும். உழைப்பு கூடுதலாகும். திருவோணம்: பெண்களுக்கு தோழர்களால் சில சங்கடங்கள் வரலாம். அவிட்டம் 1,2: பழைய வீட்டிலிருந்து புது முகவரிக்கு மாற வேண்டிவரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: அலைச்சலுக்கு பிறகு நன்மைகள் உண்டு. யுக்தி பலிக்கும். சதயம்: திருப்திகரமான நாள். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: உங்களின் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுவீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: கைமாற்றாக வாங்கிய தொகையைத் திருப்பித் தருவீர்கள். உத்திரட்டாதி: வாகனத்தால் திடீர் செலவுகள் ஏற்படும். கவலைகள் தீரும். ரேவதி: முன்பு செய்த பணிகளுக்கான அங்கீகாரம் இப்போது கிடைக்கும்.
நன்றி – தினமலர்