டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு விஜய் ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர்.
இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.
இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி பிறகும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக விவாகரத்தும் வாங்கினார்கள்.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் ஜாதகம் திவ்யதர்ஷினி உடன் ஒத்துப் போவதால் திருமணம் செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.