இரண்டு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில், இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில், சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதைகள் உற்பத்தி, உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக, சஷிந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, மொஹான் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.