உணவே மருந்து என்பதனை கூறும் இயற்கை வைத்தியம். சில நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவு உடல் எடையை அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும் என்று பலரும் சொல்லி கேட்டிருக்கிறோம்.
குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும்; இல்லாவிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று சொல்வதுண்டு. உண்மையிலேயே இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? இது பலருக்கும் இருக்கும் சந்தேகம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
அடிப்படையில் இது ஒரு தவறான புரிதல். நாம் கண் விழித்திருக்கும் நேரங்களில் மட்டுமல்ல; எல்லா நேரங்களிலுமே நம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் தூங்கும்போது கூட உடலில் ரத்த ஓட்டம், நுரையீரல் செயல்பாடு மற்றும் மூளை செயல்பாட்டிற்காக நமது உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது.
இது உடல் எடையை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யாது. ஆனால், நாள் முழுவதும் எவ்வளவு சாப்பிடுகிறோம் அதை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதுதான் உடல் எடையை தீர்மானிக்கிறது.உடலில் மெட்டபாலிசம் என்பது ஒரு சிக்கலான செயல்முறை. நாள் முடியும்போது உடலின் மெட்டபாலிசம் குறைந்துவிடும்; அதனால் கலோரிகள் எரிக்கப்படாது என்று பலர் நினைக்கின்றனர்.
ஆனால், மெட்டபாலிசம் குறைந்தாலும், அதன் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டுவிடாது என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் இரவில் உட்கொள்ளும் கலோரிகள் மெட்டபாலிசத்தை மாற்றப்போவதில்லை அல்லது பகல் நேரத்தில் உட்கொண்ட கலோரிகளின் அளவை குறைப்பதுமில்லை என்கின்றனர்.
எனவே, ஒரு நாள் முழுவதிற்கும் சாதாரண ஆணுக்கு 2,500 கலோரிகள் தேவைப்படுகிறது. அது போல ஒரு பெண்ணுக்கு 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அதற்கு மேல் உணவை நாம் உண்டால். உதாரணமாக 3000 ஆயிரம் கலோரி உணவை நாம் உண்டால், மீதமுள்ள 500 கலோரிகளும் உடலில் கொழுப்பாக தங்கி விடுகிறது.
இதனால் உடை எடை அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், ஏக காலத்தில் உணவையும் குறைத்து, உடல் பயிற்ச்சியிலும் ஈடுபட்டால் போதும். உடனே உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும். அவ்வளவு தான்.இது கேட்பதற்கு மிகவும் இலகுவானது..ஆனால், இதை நடைமுறைப்படுத்துவது பலருக்கும் இன்றும் கடினமாகத் தான் இருக்கின்றது..இது தான் யதார்த்தம்.