இலங்கையில் 18 வயதை கடந்த சகலருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படுவதை வரவேற்கிறேன். என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பயிற்சியை தமிழ் மொழியிலேயே வழங்கவேண்டும் எனவும் முன்னாள் போராளிகளை இந்தப் பணியைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியம் வழங்கலாம் என கூறியுள்ளார்.
18 வயதை கடந்த அனைவருக்கும் இராணுவப்பயிற்சி அளிக்கும் யோசனையை முன்வைத்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் யோசனை குறித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து இவர் மூலும் கூறுகையில்,
அவ்வாறு பயிற்சி அளிப்பதாயின், தமிழ் மொழி அதிகாரிகளைக் கொண்டு வடக்கு, கிழக்கு பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இராணுவத்தில் தமிழ் மொழி மூலம் பயிற்சி கொடுப்பதற்கு தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து வரவழைத்து பயிற்சி வழங்கலாம். அப்படி இல்லாது சிங்களத்தில் பயிற்சி அளிப்பதாயின் தாம் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
