பருத்தித்துறை – மந்திகைப் பகுதியில் பேரணியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் மறித்து தடைகளை ஏற்படுத்தி பேரணியில் ஈடுபட்டவர்களை தடுக்க முயற்சித்தனர்.
பருத்தித்துறை நோக்கிப் பேரணி பயணித்த போது மந்திகை மடத்தடியில் வீதியின் குறுக்கே நின்று பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வைத்து தடுக்க முயன்றனர்.
அத்துடன், பேரணியில் வந்தோரைப் பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் அகன்றமை குறிப்பிடத்தக்கது.
