விடுதலைப் புலிகளுடனான மோதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உண்மையான மனித உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் 17.02.2021 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க, புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக பிரச்சினைகள் எழுந்ததாக குறிப்பிட்டார்.
மேலும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவம் மீது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புகளுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என்றும் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.
ஆகவே இலங்கை தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.