இலங்கை ஆயுதப் படைகளின் ஆளுமை விருத்தியை மேலும் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வ பங்களிப்பினை வழங்குவது குறித்த இந்தியாவின் நிலையான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இலங்கை ஆயுதப் படைகளின் அதிகாரிகள் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்தியிலான மெய்நிகர் மாநாடு ஒன்று 2021 ஜனவரி 13ஆம் திகதி அன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்த இணைய மாநாடானது இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் கே ஜேக்கப், இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்கை அதிகாரி மேஜர் ஜெனரல் AWAPK திலகரட்னே ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் இந்திய – இலங்கை முப்படைகளையும் சேர்ந்த அதிகளவான பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை பாதுகாப்பு படையினரின் நலன்கள் மீது இந்தியா கொண்டிருக்கும் கரிசனையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இந்தியாவிலுள்ள பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்படும் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் அவர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியாவின் சாகர் கோட்பாட்டினை புரிந்துணரவும் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வினைத்திறன் மிக்க வகையில் முறியடிப்பதற்கு வலுவான பங்களிப்பினை வழங்கும் என்ற இலக்குடனும் இலங்கை பாதுகாப்பு படையினர் விரும்பும் தயாரிப்புக்களுடனான விபரங்கள் இந்த மாநாட்டின் போது கையளிக்கப்பட்டிருந்தன.