தமிழகத்திற்கு 14/02/2021 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அவர் சென்னையில் இடம்பெற்ற அரச விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களின் நலனை இந்திய மத்திய அரசாங்கம் உறுதி செய்துவருகிறது. தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். அத்துடன் இலங்கை தமிழர்களுக்காக 50,000 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுகின்ற தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன்.
