ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையின் உள்ளடக்கம் மீது இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நம்புவதாக, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் பேச்சாளர் லிஸ் துரோசெல் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் பேச்சாளர் லிஸ் துரோசெல், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும், அதன் முக்கியமான பரிந்துரைகளின் உள்ளடக்கம் மீது இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக இந்த அறிக்கையை நிராகரித்திருந்த இலங்கை அரசாங்கம், அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.