-க.கமலநாதன்-
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணிப்பவர்கள் அடடா தாஜ்மஹால் இலங்கையில் தான் இருக்கிறதா என வியந்து பார்க்கும் வகையில் தாஜ்மஹாவில் நிர்மாண கட்டமைப்பை ஒத்ததான வடிவத்தில் அமைந்திருக்கும் பட்டிக்களோ கம்பஸ் தனியார் நிறுவனம் நாட்டுக்கு பெரும் சர்சைக்கு உள்ளான நிறுவனமாக அண்மையில் மாறியிருந்தது.
அதன்படி இந்த நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாவும், உரிமையாளருமான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிய அவர், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை உண்மைக்கு புறம்பானவை என உறுதிப்படுத்த தன்னிடம் ஆதரங்கள் இருப்பதாக கூறி நழுவிக்கொண்டார்.
எவ்வாறாயினும், 2013 ஆண்டு தொடக்கம் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் காணப்படுகின்ற சில்லகளை கலையும் நோக்கில், இந்த பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டுமென்ற தீர்மானத்துக்கு வந்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் 2020 ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள கணக்காய்வு அறிக்கையில், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹூக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையும் நிதி வழங்கியுள்ளமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் இந்த கணக்காய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதன்படி, சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் உயர்கல்வி நிறுவனமொன்றை நடத்துவதற்கு அவசியமான ஏற்பாடுகள் எவற்றையும் இந்த நிறுவனம் பூர்த்தி செய்திருக்கவில்லையென கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கும் காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாக இருந்துள்ள நிலையில் அரச காணியொன்றை தனியாருக்கு வழங்கப்படுகின்ற போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
35 ஏக்கர் காணிப்பரப்பு மாத்திரமே இந்த கல்லூரியை கட்டமைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த போதும், 55 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் பல்கலைகத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையின் நியமங்களின் படி நிறுவபடாத போதும் முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு 71 மில்லியன் ரூபா பெறுமதியான இறக்குதி தீர்வை நிவாரணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதெனவும் கணக்காய்வில் தெரியவந்திருக்கிறது.
மத்திய வங்கியின் வழிக்காட்டல்கள், விதிமுறைகளை பொருட்படுத்தாமலேயே, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த 3671 மல்லியன் ரூபா வெளிநாட்டு நிதியை இலங்கை வங்கி விடுவித்துள்ளதெனவும், குறிப்பாக இந்த கல்வி நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்காக> தொழில்சார் பயிற்சி அமைச்சுடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டரீதியான தன்மை குறித்தும் சிக்கல் நிலைமை காணப்படுகின்றதெனவும் தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்டிருந்த மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மேற்படி கல்வி நிறுவனம்> உயர்கல்வி நிறுவனம் என்ற ரீதியில் நிறுவப்படுவதை கருத்தில் கொள்ளாமல் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் வழங்கப்படும் தரச் தரச்சான்றிதழ் வழங்குவதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தாகவும் குறிப்பிடப்ட்டுள்ளது.
2013 ஏப்ரல் 13 ஆம் திகதி இந்த கல்லூரியை நிறுவுவதற்கான அனுமதியை அப்போதைய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவிருந்த ஏ.எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரியிருப்பதோடு, இளைஞர் விவகாரம், தொழிற்திறன் அமைச்சினால் மேற்படி கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான அனுமதி 2013 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தொடர்பில் ஆராய்திருந்த அப்போதைய இளைஞர் விவகாரம் திறன் விருத்தி அமைச்சு, மேற்படி பல்கலைக்கழகத்தில் ஆண் மாணவர்கள் மாத்திரமே கற்க முடியும் என்ற வரையறையிருப்பதையும் அறிந்துகொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கையின் எந்தவொரு பிரஜையும் இங்கு கல்வியை தொடர முடியுமென நிறுவனத்தின் யாப்புக்களை மாற்றியமைக்குமாறு ஹிரா நிதியத்துக்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைளில் வெளியிடப்பட்ட அறிப்பொன்றையும் கணக்காய்வு திணைக்களம் மேற்கொள் காட்டியிருப்பதுடன் இந்த பல்கலைக்;கழகத்தில் Nஏஞ சான்றிதழுக்கான கற்கை நெறியைத் தொடர்வோரிடம் 2,16,000 ரூபாவை கட்டணமாக அறவிடுதற்கு முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரியிருந்த அனுமதியை இளைஞர் விவகாரம்> திறன் விருத்தி அமைச்சு 2013 ஆம் ஆண்டிலேயே நிராகரித்துள்ளது.
அதேபோல் நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே அப்போதைய இளைஞர் விவகாரம் திறன் விருத்தி அமைச்சரான டலஸ் அலகப்பெரும தலைமையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி இந்த பல்கலைக்கழம் திறந்து வைக்கப்பட்டிருப்பதுடன், ஹபரன – பூனானை பிரதான வீதியின் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் கிழக்கு பல்கலைக்கழகம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், கிழக்கிலுள்ள அரச பல்கலைக்கழகத்தின் உபவேந்தரால் மேற்படி தனியார் பல்கலைக்கழகத்துக்கு இருக்கின்ற சட்டரீதியான பிணைப்புக்கள் தொடர்பில் ஆராயுமாறு 2104 ஆண்டிலேயே தொழில்சார் பயிற்சி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் மேற்படி பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக மஹாவலி அமபிவிருத்தி அதிகார சபையிடம் பெறப்பட்ட அனுமதிப் பத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் போதே, இந்த பல்கலைக்கழகம் பட்டிகளோ கெம்பஸ் “தனியார் பல்கலைக்கழகம்” என்று இந்த நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து 2017 ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியின் அனுமதியும் பெறப்பட்டு, பெட்டிகளோ கெம்பஸ் நிறுவனத்துக்கு அவசியமான காணித்துண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து இலங்கை முதலீட்டுச் சபையின் திட்டமாக இந்த நிறுவனத்தை பதிவு செய்ய எடுத்துள்ள முயற்சிகளின் போது, நிறுவனத்தின் 95சதவீதம் ஹிரா மன்றத்துக்கும், ஏனைய 5 சதவீதம் தனக்கும் உரித்தாக வேண்டுமென கோரியிருப்பதோடு இந்த நிறுவனத்தை நிறுவும் போது 4.75 மில்லியன் ரூபாவை முதலீடாகவும் 1.55 மில்லியன் ரூபாவை உள்நாட்டு நிதியிலிருந்து பெறவும் தீர்மானிக்கப்பட்டிருந்தாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்த நிறுவனத்தினால் இலங்கை வங்கிகளின் வெவ்வேறு கிளைகளில் நடத்திச் செல்லப்பட்ட 14 வங்கிக் கணக்குகளுக்கு, 2016 – 2017 வரையான காலப்பகுதியில் (41,23,859,831) 4.12386 பில்லியன் ரூபா முதலீடுகளாக கிடைத்திருந்தன என்றும் அந்த தொகை கீழ்வரும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்யபட்டிருந்தன என்றும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
வங்கிக் கணக்கு இல. | கணக்கு உரிமையாளர் | வெளிநாட்டு பணம் |
1631952 | ஹிரா மன்றம் | 3,13,128,281 ரூபா (313.128281) |
7895137 | பெட்டிக்களோ கெம்பஸ் | 36,40,339,488 ரூபா (3.640.339488) |
80961953 | ஏ.எம்.ஏ.லங்கா தனியார் நிறுவனம் | 14,49,78,158 ரூபா
(144.978158) |
74791337 | மலிக் அப்துல்லா பின அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி | 2,48,49,903 ரூபா
(24.849903மில்லியன்) |
மொத்தம் (4.12386 பில்லியன்) 4,123,895,831ரூபா |
பெட்டிக்களோ கெம்பஸ் நிறுவனத்துக்கு இவ்வாறு பெறப்பட்ட நிதிகளில், ஏ.எம்.ஏ லங்கா நிறுவனத்துக்கு பணத்தை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் ஆபத்தின் நிலைமை குறைவாக இருந்த போதிலும், மற்றைய நிறுவனங்களுக்கு பணத்தை பெற்றுகொள்வதால் ஏற்படக்கூடிய அவதானங்களை பொருட்படுத்தாமலேயே இந்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான கணக்குகளுக்கு நிதிகளை பெற்றுக்கொள்ளும்போது, 39 சட்டமீறல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவெனவும், 7895137 என்ற இலக்கத்துக்கு 11 தடவைகளில் வெளிநாட்டிலிருந்து பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்தபோதும், வைப்புச் செய்தவர்களின் அடிப்படைத் தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை வங்கி முன்வந்திருக்கவில்லையென்றும், குறித்த வங்கிக் கணக்குக்கு சுமார். 59,975,000 ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கைச் சுட்க்காட்டியுள்ளது.
அதேநேரம் ஹிரா அமைப்புக்கு கிடைக்கப்பெற்ற (313.128281 மில்லியன்) 313,128,281 ரூபா பணம் தடைச் செய்யப்பட்ட அமைப்புக்களிமிருந்து வந்தவையா என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையென சுட்டிக்காட்டும் கணக்காய்வுத் திணைக்களம் காத்தான் குடி இலங்கை வங்கி கிளையில் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ{வின் கோரிக்கையை ஏற்று மலிக் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் என்ற பேரில் போலியான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து நடத்திச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கணக்காய்வாளர்கள் கோரிய போது இலங்கை வங்கி அதற்கான தகுந்த காரணத்தை கூற முன்வந்திருக்கவில்லை என்றும், 2016 – 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் இணைத்துகொள்ளப்பட்டிருந்ததுடன் உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுகொள்ளப்படாமலேயே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கணக்காய்வுக் குழு சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுருத்தியிருக்கும் கணக்காய்வு குழுவானது> இந்த கல்லூரிக்கு மாணவர்களை அழைப்பதற்கான முறையற்ற விதத்தில் அரச இலட்சணையை பயன்படுத்தியமைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசிமெனவும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த நிறுவனத்துக்கு தீர்வை நிவாரணமாக வழங்கப்பட்ட 47.51 மில்லியன் ரூபாவை மீள அறவிட நடவடிக்கை எடுக்குமாறும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வங்கிக்கு அறிக்கை சமர்பிக்க தவறிய ஊழியர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுருத்தியிருக்கிறது.
அதேபோல் இந்த கல்லூரிக்கு தனியானதொரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டமை தொடர்பாக சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்குமாறும், பெட்டிக்களோ தனியார் நிறுவனத்தை நிறுவனத்துக்காக காத்தான் குடி நகர சபைக்கு சொந்தமான வழங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட 8,475,000 ரூபாவை மீள அறவிட நடவடிக்கை எடுப்பதோடு, அதற்கான தண்டப்பணங்களை அறவிடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி டபிள்யூ.பி.சி, விக்கிரமரத்னவினால் வெளியிடப்பட்டிருக்கும் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.