யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய மகன் கல்வி கற்றும் யாழ்.இந்துக் கல்லுாரியின் கற்றல் செயற்பாடுகள் 25.02.2021 இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ள நவாலியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தரின் மகன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்.
தரம் பத்தில் கல்வி பயிலும் தாதிய உத்தியோகத்தரின் மகன் கல்வி கற்கும் வகுப்பு மாணவர்கள் நேற்று முற்பகலே வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். முதலாம் தவணைக்காக இன்று விடுமுறை விடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று இந்துக்கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.