வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர். இந்தச் சம்பவம் ஊரெழு பகுதியில் இடம்பெற்றது.
நேற்று 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,பொக்கணை முருகன் கோயில் பகுதியில் சுன்னாகம் பொலிஸார் மதுபதையில் வீதியில் நின்ற இளைஞனை வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பிரதேசசபை உறுப்பினர் பொலிஸாரினுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார். அவருடன் இருந்த இளைஞர் குழுவும் தர்க்கத்தில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும் இளைஞர் குழுவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. மேலும் உறுப்பினர் தன்னை பிரதேசசபை உறுப்பினர் என கூறி பல தடவைகள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.