மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்றைய தினம் 02.03.2021 கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.