யாழ்.நகருக்குள் கஸ்த்தூரியார் வீதியில் உள்ள வீடென்றின் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
உதயன் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு (0602.2021) 11.45 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வாள்கள் கத்திகளுடன் வந்து வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.
இந்நிலையில் வீதியால் வாகனங்கள் வருவதை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்நிலையில் அந்த வீதியால் சென்று கொண்டிருந்த யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பாதிக்கப்பட்ட வீட்டாரை சந்தித்து பேசியதுடன் வீட்டையும் பார்வையிட்டார்.
மேலும் தாக்குதலை நடத்திய கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசவும் தயாராகவே வந்த நிலையில் தப்பிச்செல்லும் அவசரத்தில் அதனை அங்கேயே வீசி விட்டு சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.