இலங்கையின் முன்னாள் இடதுகை ஆரம்ப வீரர் உப்புல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக 23.02.2021 அன்று அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2005இல் அறிமுகமான சிரேஷ்ட வீரரான உப்புல் தரங்க, கடைசியாக தென் ஆபிரிக்கா வுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார்.
‘சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்’ என தனது டுவிட்டர் பதவில் உப்புல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.
31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உப்புல் தரங்க 3 சதங்கள் உட்பட 1,754 ஓட்டங்களையும் 235 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15 சதங்கள் உட்பட 6,951 ஓட்டங்களையும் அத்துடன் 26 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 407 ஓட்டங்களையும் பெற்றார்.