எகிப்தில் புராதன பியர் தொழிற்சாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் பியர் உற்பத்தி செய்யப்பட்ட உலகின் மிகப் பழைமையான பியர் தொழிற்சாலை என இது நம்பப்படுவதாக எகிப்திய சுற்றுலாத்துறை அமைச்சு 13.02.2021 அன்று தெரிவித்துள்ளது.
எகிப்திய, அமெரிக்க தொல்லியலாளர்கள்குழு வொன்றினால், தென்கிழக்கு எகிப்தின் அபிதோஸ் நகரில் இப்புராதன தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்தை ஆண்ட மன்னன் நார்மேரின் காலத்துக்குரியதாக இது இருக்கலாம் என தொல்பொருட்களுக்கான எகிப்தின் அதி உயர்சபையின் செயலாளர்நாயகம் மொஸ்தபாவஸிரி தெரிவித்துள்ளார்.
மன்னன்நார்மேர் 5,000 வருடங்களுக்கு முன்னர் எகிப்தை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி மத்தியூ அடம்ஸ், பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி டெபோராவிஸ்சாக் ஆகியோர் இந்த ஆராய்ச்சிக்குழுவுக்கு தலைமைதாங்கினர். ஒருதடவையில் 22,400லீற்றர் அளவுபியர் அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என கலாநிதி மத்தியூ அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
(Photos: AFP)