உலகின் மிகப்பெரிய 7½ அடி உடைய நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த டேன் ஃப்ரெடி, தனது 8½ வயதில் இங்கிலாந்தின் எசெக்ஸ் நகரில் ஜனவரி 27 அன்று காலமானது.
அதன் உரிமையாளர் கிளாரி ஸ்டோன்மேன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிடம் தனது செல்லப்பிராணி “உலகின் மிகப்பெரிய நாய் மட்டுமல்ல, அது ஒரு பெரிய இதயத்துடன் மிகவும் அன்பான ஒன்றாகும்” என்று கூறினார்.
கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பெரும்பாலான நாய்கள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
அதன் மரணம் வருத்தமளித்தாலும், ஃபிரெடி மிகவும் நேசிக்கப்பட்டது என்பது மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.