இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நேற்று (09.02.2021) நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 227 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய இங்கிலாந்து, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் மூன்று இடங்கள் மூன்னேறி முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பதாக 68.7 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்திலிருந்த இங்கிலாந்து, இந்த வெற்றியுடன் 70.2 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
71.7 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்தியாவுக்கு இந்தத் தோல்வியினால் 3.4 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா நான்காம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. நியூஸிலாந்து 70.0 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.
இந்தியாவுக்கும் – இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தால் அல்லது இங்கிலாந்து 2 – 0 அல்லது 2 – 1 என வெற்றிபெற்றால் நியூஸிலாந்து முதலாம் இடத்துக்கு முன்னேறும்.