நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் இன்று (18) எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை சந்தித்து தமது எதிர் கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து முன்னொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் கடந்த 2015 பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பேட்டியிட்டதோடு, 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டவராவார்.