கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன் பாலிகேமி முறையில், மகிழ்ச்சியாக, என்று வின்ஸ்டனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். பாலிகேமி என்பது கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் முறை.
அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம். ஆனால் அண்மைக்காலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவித்தார்.
தன் அம்மாவை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ என அழைப்பதாக பதிவுட்டுள்ளார் மெர்லின். 3 குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கைகளை தனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல தாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது அப்பாவுக்கு, அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 12 பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம் என்று மெர்லின் கூறியுள்ளார்.
மூலம் :தினத்தந்தி