இலங்கையில் விமான எரிபொருள் விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கையிருப்புகளை அவசரமாக நிரப்பாவிட்டால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கணிசமான அளவு குறையும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் விமான எரிபொருளைக் கோரியுள்ளது.
வழங்குநர்கள் தரைவழி போக்குவரத்து, மின் நிலையங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருளைக் வழங்க போதியளவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்க முடியாவிட்டால் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.