ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றில் தமிழக ஆளுநருக்கு எதிராக நளினி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9ஆம் திகதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும், அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தநிலையிலேயே தமிழக ஆளுநருக்கு எதிராக நளினி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளனர்.