இலங்கை விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான துணிச்சல் ஐக்கிய நாடுகள் கட்டமைப்பிடம் இல்லை என முன்னாள் உதவி செயலாளர் நாயகம் சார்ல்ஸ் பீட்ரே தெரிவித்துள்ளார்
உலகதமிழர் பேரவை, மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த மெய்நிகர் கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான துணிச்சல் ஐ.நா.விற்கு இல்லை. இலங்கை விவகாரத்தை கையாள்வதற்கான அமைப்பு முறை தன்னிடம் இல்லை என ஐ.நா. தெரிவிக்க முடியாது.
கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் சரியான விடயங்களை செய்ய விரும்பும் அதிகாரிகள் உள்ளனர், எனினும் ஐ.நா.விற்கு நடவடிக்கை எடுப்பதற்கான துணிச்சல் இல்லை. ஆகவே இலங்கை மக்கள் ஐ.நா.வை நம்பியிருக்ககூடாது.
ஐ.நா.வை நம்பியிருந்தால் இலங்கை மக்கள் ஏமாற்றமடைவார்கள்.இலங்கை மக்கள் தங்கள் உறுதிப்பாட்டில் நிலையாகயிருந்தால் ஐ.நா. செயற்பாட்டால் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம் என்றார்.