ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் கிச்சகப் பதிவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான காணொளி வெளியிடப்பட்டுள்ளமைக்கு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்
கடந்த கால மனித உரிமை மீறல்களை சிறிலங்கா கவனிக்கத் தவறியுள்ளது என்றும், எனவே, மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தப் பதிவில் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்துடன் தொடர்பான காணொளி காட்சியும் அந்த கீச்சகப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன “ சிறிலங்கா அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் நல்லிணக்கத்துக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே இதற்கு எதிர்ப்பை வெளியிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், ஐ.நாவிற்கும் இந்த விடயம் சம்பந்தமாக கண்டனம் தெரிவிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.