2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரை இந்தியாவிலேயே நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இம்முறை ஐ.பி.எல் போட்டி ஏலத்திற்காக 283 வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.