வெளிநாட்டிலுள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக இயக்கம் ஒன்றை அதிபர் ஜோ பைடன் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அவர்களின் உரிமைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் (Barack Obama) 2011இல் தொடங்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒரு படி மேலே சென்றுள்ளார் அதிபர் பைடன்.
டிரம்ப் நிர்வாகம் அதன் தொடர்பாக எடுத்த முடிவுகளை மாற்றியமைப்பதும் பைடனின் நோக்கமாகக் கருதப்படுகிறது. LGBTIQ என்ற ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட மற்ற பாலினத்தவரின் உரிமைகள் குறித்த அமெரிக்க முயற்சிகள் விரிவுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
180 நாட்களுக்குள் LGBTIQ உரிமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டுவர, வெளிநாடுகளில் செயல்படும் அனைத்து அமெரிக்க அரசாங்க அமைப்புகளுக்கும் உத்தரவிடுவதாகத் பைடன் தெரிவித்தார்.