யாழ்.காரைநகர் – நீலங்காடு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டால் 19.02.2021 தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இப் பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் படி அந்தக் காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்த போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்பட்டுத்தினர். இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.