இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள ஒரு மயானத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200 க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் கடலுக்குள் சரிந்தன.
மயானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் இந்த மயானம் அழிக்கப்பட்டுள்ளது. கடலை அண்மித்ததாக உள்ள மலைப்பாங்கான பகுதியில் கமோக்லி என்ற இந்த மயானம் அமைந்துள்ளது.
இந்த மயானத்துக்கு அருகில் இருந்த இரு தேவாலயங்களும் கடலரிப்பால் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.