அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸும் கடந்த 20 ஆம் திகதி பதவி ஏற்றனர்.
அதற்குமுன், டெலாவேர் மாநிலத்திலுள்ள நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டிசம்பர் 22 ஆம் திகதி ஜோ பைடன் கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.
இதேபோல், உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் டிசம்பர் 29 ஆம் திகதி உட்செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று முன்தினம் செலுத்தப்பட்டுள்ளது.