அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் நாட்டின் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்னை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார்.
ஒருகட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை அறிந்து தனது கிட்னியை தானமாகக் கொடுத்துள்ளார். ஆனால் காதலி கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் காதலை பிரேக் செய்து கொண்டுள்ளார்.
மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன உசீல் டிக்டாக்கில் புலம்பி வருகிறார். இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், “எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் கிடைக்கவில்லை என்பதால் நான் எனது காதலியின் தாயின் உயிரைக் காக்க எனது கிட்னியை தானமாகக் கொடுத்தேன்.
ஆப்ரேஷனும் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், ஆப்ரேஷன் நடந்து ஒரே மாதத்தில் என்னுடன் பிரேக்அப் செய்து கொண்டு வேறு ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டார்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ டிக்டாகாக்கில் வேகமாகப் பரவி வருகிறது.