தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரும், லொறியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி – இந்திராணி தம்பதியர், தங்களது குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பி உள்ளனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அத்திமானம் என்ற இடத்தில் அவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லொறி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சுப்பிரமணி, அவரது மனைவி, மகள்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.