யாழ்.ஆறுகால்மடம் பழம் வீதியில் வீடொன்றை உடைத்து பெருமளவு தங்க நகைகளை களவாடிய கள்ளனை 3 மணித்தியாலத்திற்குள் யாழ்.நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. பாடசாலைக்கு பிள்ளைகளை விடுவதற்காக சென்றிருந்த நிலையில் வீட்டை உடைத்த கள்ளன் வீட்டிலிருந்த நகைகளை களவாடியுள்ளான்.
சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியிருந்த நிலையில் துரித விசாரணைகளை மேற்கொண்டிருந்த மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர்,
பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலமையிலான பொலிஸ் அணி நகைகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்த கள்ளன் யாழ்.நகரில் உள்ள கஸ்த்துாரியார் வீதியில் உள்ள நகைக்கடைகளில் நடமாடுவதைகண்டறிந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து கள்ளனை கைது செய்துள்ளதுடன் அவனிடமிருந்து சுமார் 41 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 கிராம் 50 மில்லி கிராம் அளவில் ஹெரோயினையும் மீட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட கள்ளன் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்த 24 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.