கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்புப் பகுதியில் இந் தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணி யளவில் தாயும், மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட தையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்தனர்.
தந்தையும், மகனும் குடும்பச் சுமை காரணமாக கூலி வேலைக்கு வெளி மாவட்டத்துக்குச் சென்ற வேளையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது த ற்கொலையா அல்லது கொலையா எனப் பொலிஸார் தீவிர விசா ரணைகளை ஆரம்பித்துள்ளனர். 7 பிள்ளைகளின் தாயாரான ஆனந் தராசா சீதேவி, அவரது 17 வயது மகளான ஆனந்தராசா லக்சிகா ஆகியோரே இறந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசார னைகளைத் தர்மபுரம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். எனவும், அதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்று, துரி தகதியில் திருத்தப் பணிகள் மேற்கொள் ளப்படும் எனவும் கல்வி வெளயீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.