யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்களால் உருவாக்கப்பட்ட பந்தய கார் மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பார்வையிட்ட கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலர் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஶ்ரீ சற்குணராஜா, யாழ் பல்கலைகழக பீடாதிபதிகள் பார்வையிட்டு தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் மேலதிக ஒத்துழைப்புகளை நல்ககுவதாக உறுதியளித்துள்ளனர்.