22 தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் கிழக்கு முனையம் இலங்கை துறைமுக அதிகார சபையினாலேயே நிர்வகிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ தெரிவித்துள்ளார்.
வியத்மக அமைப்பின் தலையீட்டினால் இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ இதற்கு மாற்றாக இந்தியாவின் முதலீட்டுடன்இ கொழும்பு மேற்கு கொள்கலன் முனையத் திட்டத்தை முன்னெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் வியத்கம அமைப்பானது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் சம்பந்தமான தனது ஆய்வறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தன் பின்னரேயே ஜனாதிபதியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
வியத்மக அமைப்பானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு அவருடைய தேர்தல் பிரசாரங்கள் மற்றும் கொள்ளைத் திட்டங்களுக்கு உதவிய துறைசார் நிபுணர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.