கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும், விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது அது தொடர்பில் வெளிநாட்டுடன் எந்தவொரு உடன்பாடும் செய்து கொள்ளவோ போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளனர். தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை. அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யவில்லை” என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.