யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் நேற்று சிவபதமடைந்தார். அவர் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியை இன்று காலை 10 மணிக்கு அவரது நல்லூர் இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
1929ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார். 1964ஆம் ஆண்டு டிசம்பர் மதம் 15ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக அவர் சேவையாற்றினார்.
இறைத் தொண்டாக அரும்பணியாற்றிய பெரும் ஆளுமை எம்மை விட்டுஇறையடி சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.