லங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் இணைந்து மேற்கொள்ளும் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை பிரதிபலிக்ககூடிய மிகப் பெரிய இராணுவ அப்பியாச பயிற்சியான ‘மித்ர சக்தி VIII’ இன் இறுதி போலி பயிற்சி நடவடிக்கை (15/10) இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த நரவனே அவர்களின் முன்னிலையில் ஆரம்பமாகின.
இந்நிகழ்வு இந்திய இராணுவ தளபதி அவரது பாரியார், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் மாதுறு ஓயாவிலுள்ள சிறப்பு படை மைதானத்தில் ஆரம்பமாகியது.
இதன்போது கட்டளை அதிகாரி கேணல் பிரகாஷ் குமார் அவர்களின் தலைமையிலான 120 இந்திய இராணுவ வீரர்களும் மற்றும் மேஜல் மகேஷ் பத்திராஜ அவர்களின் தலைமையிலான அதே சம அளவானஇலங்கை இராணுவத்தின் விஜயபாகு காலாட் படையணியின் படையினரின் பங்கேற்புடன் குறித்த 8 வது மித்ர சக்தி பயிற்சிகள் 3 ஒக்டோபர் 2021 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்திய இருதரப்பு கூட்டு பயிற்சிகள் நாடுகடந்த பயங்கரவாதம், செயல்பாட்டு திறன்கள் , கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை நடத்துதல், ஒருவருக்கொருவர் சிறந்த தொடர்பாடல் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இப் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்படி உருவாக்கப்பட்ட களத்தில் போரிடுதல் (FIBUA) பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயிற்சிகளின் ஆரம்ப கட்டமாக பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களால் பிரதம அதிதிகளான இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நவரனே மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியும் இலங்கை இராணுவத் தளபதியும் பயிற்சி களத்திற்கு செல்லும் முன்னதாக இவ்வாண்டிற்கான “மித்ர சக்தி” அப்பியாச பயிற்சிகள் தொடர்பிலான வீடியோ காட்சி பதிவொன்றையும் பார்வையிட்டனர்.
இந்திய இராணுத்தின் கேணல் கிரிஷ் கோடியல், கேணல் ஜோன் டேனியல் பெண் அதிகாரி லெப்டினன் கேணல் சுலேஜ் மீரா ஆகியோர் இரண்டு வாரங்காள மேற்கொள்ளப்பட்ட மேற்படி பயிற்சிகள் கண்காணிப்புச் செய்யப்பட்டன. இப்பயிற்சிகளின் போது இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர்கள், கவச வாகனங்கள் என்பவற்றோடு பயிற்சி களத்தில் சர்வதேச கிளர்ச்சிகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, இடம்பெறும் வகையிலான சூழலொன்று உருவாக்கப்பட்டது.
மேற்படி அப்பியாச பயிற்சிகளின் போது படையனர் மிகுந்த ஆர்வத்துடன் மறைவிடங்களிலிருந்து எதிரிகளின் மறைவிடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் 40 நிமிட அப்பியாச பயிற்சிகளை ஆழமாக கண்காணித்தனர்.
அதனையடுத்து பயிற்சி பணிப்பாளர் நிஷாந்த மானகே அவர்களினால் இந்திய இராணுவ தளபதியான ஜெனரல் மனோஜ் முகுந்த் மானகே மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோகருக்கு நினைவு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட சிப்பாய்களுடன் கலந்துரையாடிய பிரதம அதிதி அவர்களுடனான குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் பங்கெடுத்தார். அதனை தொடர்ந்து சிறப்பு படை பயிற்சி கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டி எண்ணங்களை பதிவிட்டார்.
அதனையடுத்து மாதுறு ஓயாவிருந்து இலங்கை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்திய இராணுவ தளபதி இருநாட்டு படைகளுக்குமிடையிலான கூட்டு பயற்சிகள் நட்புறவு மற்றும் வலிமை என்பவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் இந்த பயிற்சிகள் நட்பின் வலிமையை பலப்படுத்தும் என்பதாலேயே மித்ர சகதி என்று பெயரிடப்பட்டுள்ளதெனவும் எதிர்காலத்திலும் இதுபோன்ற இராணுவ அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமென தான் கருதுவதாகவும் ஜெனரல் மனோஜ் முகுந்த நரவனே தெரிவித்தார்.
அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா இரு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இரு தரப்புக்கும் இடையிலான தொழில்முறை தரங்கள், தனிப்பட்ட திறன்கள் மற்றும் இருதரப்பு செயற்பாடுகள் உதவும் எனவும் தெரவித்தார்.
“இலங்கை இராணுவப் படைகள் அனைத்து ஆயுதங்களாலும், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) பிரிவுகளை உள்ளடக்கியதாக விளங்குவதோடு, இது கொவிட் -19 தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மிக முக்கிய பணிகளை செய்துள்ளதெனவும், கஜபா படையணியின் ஆண்டு நிறைவு தினத்தை தொடர்ந்து இந்திய இராணுவ தளபதியின் பங்கேற்புடன் அப்பியாச பயிற்சிகள் மேற்கொள்ளபட்டமை சிறப்பானதாகும் என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் இரு சேவைகளுக்கிடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கையில் மாறி மாறி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி பயிற்சிகளின் போது கொரோனாசுகாதார ஒழுங்கு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டன.