கொக்கட்டிச்சோலை படுகொலை 34,ம் ஆண்டு நினைவு 28/01/2021 அன்று மு.ப: 9.30,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி” முற்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி ஊடகசெயலாளரும் பட்டிருப்பு்தொகுதி இலங்கை தமிழரசு கட்சி்தலைவர் பா.அரியநேத்திரன் தலைமையில் பொலிசாரின் தடைகளையும் மீறி இடம்பெற்றது.
கொக்கட்டிச்சோலை படுகொலை 34ஆம் ஆண்டு நிகழ்வை்நடத்தக்கூடாது என மண்முனை்தென்மேற்கு பட்டிப்பளை்பிரதேச தவிசாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேச தமிழரசு கட்சி்தலைவருமான சி.புஷ்பலிங்கம் அவர்களுக்கு கொக்கட்டிச்சோலை்பொலிசார் பொலிஷ்நிலையத்திற்கு சமூகம் தருமாறு அழைத்து எச்சரித்தனர். இதன்காரணமாக தவிசாளர் சி.புஷ்பலிங்கம் பொலிசாரின் வாய்மூலமான கட்டளையை ஏற்று இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை நினைவுத்தூபி அமைந்துள்ள மகிழடித்தீவு சந்தியில் பொலிசார் குவிக்கப்பட்டும் புலனாய்வாளர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டும் நின்றனர் நினைவுத்தூபி வளாக வாயிலில் நின்ற பொலிசார் உட்செல்லவிடாமல் தடுத்தபோதும் அதை மீறி உள்ளே சென்று சுகாதார நடைமுறைகள் சமூக இடைவெளிகளை பேணி இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
உயிர்நீத்த உறவுகளின் உடன்பிறப்புகள், பெற்றோர் உறவினர்கள் படையினரின் அச்சம் காரணமாக சமூகம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.