கொரோனாவினால் இலங்கையில் மேலும் 43 பேர் மரணமானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இம்மரணங்கள் நேற்று இடம்பெற்றதாகப் பதிவு செயயப்பட்டுள்ளதாக இன்றிரவு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளது.