ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். தெஹிவளை மற்றும் ராகம பகுதிகளில், விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து, ஒரு கிலோகிராம் ஹெரோயினும், 750 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.