ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனதை நானறிவேன். எனது மனதை அவரறிவார் என தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஜனாதிபதி தேர்தலின் முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர், மஹிந்த ராஜபக்சவையும், கோட்டாபய ராஜபக்சவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக. ஆனால் கோட்டாபய தேர்தலில் வெற்றியடைந்ததும், அவருடன் பேச தயாராக இருப்பதாக சொன்னார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்த போது, தம்முடன்தான் ஜனாதிபதி பேச வேண்டுமென சொல்கிறார்கள். ஐ.நாவில் ஜனாதிபதி ஆற்றிய உரை மிகச்சிறந்தது என அவருக்கு செய்தியனுப்பினேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனதை நானறிவேன். எனது மனதை அவரறிவார் என தெரிவித்துள்ளார்.