உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளின் பேரில், வளரும் நாடுகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10 மில்லியன் மருந்தளவு கொரோனா தடுப்பூசிகளை கோவாக்ஸுக்கு வழங்க சீனா முடிவு செய்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.
‘தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை ஊக்குவிப்பதற்கும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் உலகளாவிய சுகாதார சமூகத்தின் கருத்தை நிலைநிறுத்துவதற்கும் சீனா எடுத்த மற்றொரு முக்கியமான நடவடிக்கை இது’ என்று செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தினசரி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
‘சர்வதேச சமூகத்தில் திறமையான நாடுகள் ஒரு சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருக்கலாம் என்பதோடு கோவாக்ஸ் தடுப்பூசி விநியோக பணிகளை ஆதரிக்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் வளரும் நாடுகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெற உதவுவதோடு, தொற்றுநோயின் உலகளாவிய தோல்விக்கு பங்களிக்கவும் முடியும்’ என்றும் அவர் கூறினார்.
சீனா உத்தியோக பூர்வமாக கோவாக்ஸில் தடுப்பூசி ஆய்வில் இணைந்துள்ளதுடன், உலக சுகாதார அமைப்போடு நெருக்கமான தகவல்தொடர்புகளைப் பேணி வருகிறது, கொரோனா தடுப்பூசிகளை உலகளாவிய பொதுப் பொருட்களாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதாகவும், வளரும் நாடுகளில் தடுப்பூசிகளின் அணுகல் மற்றும் மலிவு விலையை ஊக்குவிப்பதாகவும் வாங் கூறினார்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி கோவாக்ஸிலை மையப்படுத்திய உத்தியோக பூர்வமான கொரோனா தடுப்பூசி ஒப்பந்தமொன்றில் சீனா கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.