யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.
17.02.2021 அன்று மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு நபர் ஒருவர் சென்ற விடயம் சீ.சி.ரி.வி கமராவில் பதிவான நிலையில் கடவாடிச்சென்ற நபரை துரத்தி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர்
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை திருடி மாட்டிய நபர் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் என்பது அம்பலமாகியுள்ளது.